/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விலை போகாத மாடுகள் விரக்தியில் வியாபாரிகள்
/
விலை போகாத மாடுகள் விரக்தியில் வியாபாரிகள்
ADDED : ஏப் 06, 2024 04:06 AM
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வார சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் ரோந்து பணியில் உள்ளதால், வெளியூர் வியாபாரிகள் வரவில்லை, உள்ளூர் வியாபாரிகள் மட்டுமே வந்ததால் எதிர்பார்த்த அளவுக்கு விலை கிடைக்கவில்லை. சில வாரங்களுக்கு முன், 60 ஆயிரம் ரூபாய் வரை விற்ற பசு மாடுகள் இந்த வாரம் 35 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே விலை போனது. ஆங்காங்கே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதால், மாடு வாங்கும் வியாபாரிகள் போதுமான பணம் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மாடு விற்பனை மிக மந்தமாக இருந்தது.

