/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'போதை பொருள்கள் விவகாரத்தில் போலீஸ் நடவடிக்கை திருப்தியில்லை'
/
'போதை பொருள்கள் விவகாரத்தில் போலீஸ் நடவடிக்கை திருப்தியில்லை'
'போதை பொருள்கள் விவகாரத்தில் போலீஸ் நடவடிக்கை திருப்தியில்லை'
'போதை பொருள்கள் விவகாரத்தில் போலீஸ் நடவடிக்கை திருப்தியில்லை'
ADDED : ஆக 25, 2024 01:29 AM
'போதை பொருள்கள் விவகாரத்தில்
போலீஸ் நடவடிக்கை திருப்தியில்லை'
அரூர், ஆக. 25-
''போதை பொருள் விவகாரத்தில், போலீஸ் நடவடிக்கை திருப்தியாக இல்லை,'' என, வி.சி., கட்சியின் துணை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான பாலாஜி கூறினார்.
தர்மபுரி மாவட்டம், அரூரில் நேற்று, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
அரூர் பஸ் ஸ்டாண்ட்டுக்கு அம்பேத்கர் பெயர் வைக்க, சட்டசபை மனுக்கள் குழுவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அரூர், அரசு கல்லுாரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு தனித்தனி விடுதி கட்டி கொடுக்க வேண்டும். போதை பொருள் விவகாரத்தில் போலீஸ் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை. இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் பொறுப்பாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
பா.ஜ., - தி.மு.க., இடையே ரகசிய உறவு ஏற்பட்டதாக தெரியவில்லை. தர்மபுரி மாவட்டத்தில் ஜாதிய கொடுமைகள் அதிகரித்துள்ளன. டில்லியில் நடந்த எம்.எல்.ஏ.,க்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். அங்கு நடப்பதை பார்த்தால், தென் மாநிலங்களை மத்திய அரசு, புறக்கணித்ததாக தெரிகிறது. நகர்ப்புறங்களில் வீடு கட்டும் திட்டத்திற்கு நிறுத்தி வைத்துள்ள, 1,500 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு தமிழகத்திற்கு உடனே வழங்க வேண்டும். பா.ஜ., - பா.ம.க., கட்சிகளுடன் எப்போதும் கூட்டணி கிடையாது. அக்கட்சிகள் இடம் பெறும் கூட்டணியில், வி.சி., இடம்பெறாது.
இவ்வாறு, அவர் கூறினார்.
பேட்டியின்போது, வி.சி., தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சாக்கன்சர்மா மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

