தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சாலை அமைக்க பூமி பூஜை

சாலை அமைக்க பூமி பூஜை

சாலை அமைக்க பூமி பூஜை


ADDED : பிப் 28, 2025 01:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2025 01:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாலை அமைக்க பூமி பூஜை

நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி ஒன்றியம், பாகலஹள்ளி பஞ்., குரும்பட்டி முதல் கடுதுகாரம்பட்டி வரையிலான, 2.60 கி.மீ., தார்ச்சாலை கடந்த, 2016ல் போடப்பட்டது. இவ்வழியாக, விவசாயிகள் விளை பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், பள்ளி கல்லுாரி வாகனங்கள் அதிகளவில் சென்று வந்தன. சாலை தரமற்ற நிலையில் இருந்ததால், 3 ஆண்டுகளில் சாலை சேதமடைந்து மிகவும் மோசமானது. இதை சீரமைக்க அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், நபார்டு திட்டத்தின் மூலம், 1.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் நேற்று பூமி பூஜை செய்து, பணிகளை தொடங்கி வைத்தார். இதில், பா.ம.க., நிர்வாகிகள் காமராஜ், பாலகிருஷ்ணன், முருகன், ராமமூர்த்தி, மாதவராஜ், வெங்கடாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us