தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அறிவிக்கப்படாத மின்வெட்டால்அவதிக்கு ஆளாகும் விவசாயிகள்

அறிவிக்கப்படாத மின்வெட்டால்அவதிக்கு ஆளாகும் விவசாயிகள்

அறிவிக்கப்படாத மின்வெட்டால்அவதிக்கு ஆளாகும் விவசாயிகள்


ADDED : பிப் 18, 2025 12:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2025 12:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அறிவிக்கப்படாத மின்வெட்டால்அவதிக்கு ஆளாகும் விவசாயிகள்

கம்பைநல்லுார்: கம்பைநல்லுார் பகுதியில் தொடரும் மின்வெட்டால், விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிக்குள்ளாகி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார், கே.ஈச்சம்பாடி, பெரமாண்டப்பட்டி, கதிர்நாயக்கனஹள்ளி உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், பல ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, 2ம் போக நெல் நடவு பணிக்கு நிலத்தை உழவு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தொடரும் மின்வெட்டால் அவதிக்குள்ளாகி வருவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது:நடப்பாண்டு, நல்ல மழை பெய்ததால், ஆழ்துளை மற்றும் கிணற்று பாசனம் மூலம் நெல், கரும்பு, மஞ்சள், மரவள்ளிகிழங்கு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்வதில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக, தினமும், 4 முதல், 5 மணி நேரம் வரை மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. அதுவும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை திடீரென மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால், ஏற்கனவே சாகுபடி செய்துள்ள நெல், கரும்பு, மரவள்ளிகிழங்கு உள்ளிட்ட பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலையுள்ளது. நெல் நடவு பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்தழுத்த மின்சாரம் வழங்கப்படுவதால், மின்மோட்டார்கள் பழுதடைந்து விடுகிறது. மின்சாரம் எப்போது வரும், போகும் என்பது தெரியாததால், மின்மோட்டார் அருகே, விவசாயிகள் காத்திருக்கின்றனர். முறையாக மின்சாரம் வழங்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us