தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூன் 22, 2024 12:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2024 12:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி : தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் செல்வி தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் தாமரைச்செல்வி முன்னிலை வகித்தார். இதில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதியுதவி திட்டப்பணிகளை, சமூக நலத்துறை மற்றும் வருவாய்த்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். கிராம செவிலியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளுக்கு முரணாக, அரசு ஆணைக்கு எதிராக இதர பணி மற்றும் கணினி பணிக்கு உட்படுத்துவதை நிறுத்த வேண்டும். கணினி பணிக்கு என தனியாக டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்களை நியமிக்க வேண்டும். பெண் சுகாதார செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us