தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மரம் விழுந்து தொழிலாளி பலி

 மரம் விழுந்து தொழிலாளி பலி

 மரம் விழுந்து தொழிலாளி பலி


ADDED : பிப் 23, 2026 02:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 02:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் அருகே வீட்டு தோட்டத்தில் மரம் முறிந்து விழுந்து தொழிலாளி இறந்தார்.

கடலுார் அடுத்த கீழ்குமாரமங்கலத்தைச் சேர்ந்தவர் பழனி, 37; தொழிலாளி. அதே பகுதியில் வாடகை வீ ட்டில் வசித்து வந்தார். நேற்று மதியம் வீட்டில் சாப்பிட்டு விட்டு தோட்டத்தில் கை கழுவ சென்றார்.

அப்போது, அருகில் உள்ள வீட்டின் உரிமையாளர் நடராஜன், தனது வீட்டு தோட்டத்தில் இருந்த 40 அடி உயர பென்சில் மரத்தை ஆட்கள் மூலமாக வெட்டினார். அப்போது, மரம் முறிந்து பழனி மீது விழுந்தது.

இதில், தலையில் பலத்த காயமடைந்த பழனியை அருகில் இருந்தவர்கள் மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்த புகாரின் பே ரில், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us