/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நீர்வளத்துறை அலுவலகம் முற்றுகை: ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
/
நீர்வளத்துறை அலுவலகம் முற்றுகை: ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
நீர்வளத்துறை அலுவலகம் முற்றுகை: ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
நீர்வளத்துறை அலுவலகம் முற்றுகை: ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
ADDED : டிச 31, 2025 04:41 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை, முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடந்ததால், பரபரப்பு நிலவியது.
மங்கலம்பேட்டை அடுத் த எம்.அகரம் - பள்ளிப்பட்டு கிராம சாலை வழியாக ரூபநாராயணநல்லுார் ஏரிக்கு செல்லும் நீர்வழி ஓடையில் இருபுறமும் ஆக்கிரமித்து பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.
இதனால் மழைக்காலங்களில் ஓடையை ஒட்டிய விளைநிலங்கள் நீரில் மூழ்கியும், குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து பொது மக்கள் பாதிப்பதும் தொடர்கிறது.
இதையடுத்து, இந்திய குடியரசு கட்சி சார்பில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வருவாய் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டதன் பேரில், இருமுறை அளவீடு செய்தும் ஆக்கிரமிப்புக ள் அகற்றப்படவில்லை.
இந்நிலையில், சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து, இந்திய குடியரசு கட்சி சார்பில் முறையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அக்கட்சியன் மாநில பொதுச் செயலாளர் மங்காபிள்ளை தலைமையில் நேற்று மதியம் 12:00 மணியளவில், விருத்தாசலம் கோட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணா போராட்டம் நடந்தது.
அப்போது, அதிகாரிகள் யாரும் இல்லாததால், அங்கிருந்த அலுவலர்களிடம் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவலறிந்த உதவி பொறியாளர் பாஸ்கரன், போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், ஓடை ஆக்கிரமிப்பு பகுதியை சுத்தம் செய்து தருவதாகவும், ஓரிரு வாரங்களில் முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனையேற்று, அனைவ ரும் கலைந்து சென்றனர்.
மாவட்ட தலைவர் கதிர்வேல், இளைஞரணி செயலாளர் அலிபாபு, ஒன்றிய செயலாளர் அலெக்ஸ்பாண்டியன், நகர தலைவர் கதிர்காமன், ஒன்றிய தலைவர் சக்திவேல், துணை செயலாளர்கள் வேல்முருகன், அன்பழகன், சக்திவேல், செல்வகுமார், ஆதி உடனிருந்தனர்.

