/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாக்காளர் சேர்க்கும் பணி: அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அழைப்பு
/
வாக்காளர் சேர்க்கும் பணி: அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அழைப்பு
வாக்காளர் சேர்க்கும் பணி: அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அழைப்பு
வாக்காளர் சேர்க்கும் பணி: அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அழைப்பு
ADDED : நவ 12, 2024 08:04 PM

சிதம்பரம்; புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணியில் அ.தி.மு.க., நிர்வாகிகள் தீவிரம் காட்ட வேண்டும் என, கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ.,கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடலுார் மாவட்டத்தில் சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி, வரும், 16, 17 மற்றும் 23, 24 சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள், அந்தந்த வாக்கு சாவடி மையங்களில் நடைப்பெற உள்ளது.
எனவே சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள், வாக்குச்சாவடி நிலை முகவர்களாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் இணைந்து, பணியாற்ற வேண்டும்.குறிப்பாக, 2025 ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி 18 வயது பூர்த்தியானவர்களின் பெயர்களை புதிய வாக்காளர்களாக சேர்த்தல், பெயர்நீக்கல், பெயர் திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவேண்டும் என, கேட்டுக்கொண்டுள்ளார்.