/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாரிசு சான்றுக்கு ரூ.4,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
/
வாரிசு சான்றுக்கு ரூ.4,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
வாரிசு சான்றுக்கு ரூ.4,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
வாரிசு சான்றுக்கு ரூ.4,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
ADDED : பிப் 03, 2024 12:20 AM

பெண்ணாடம்- வாரிசு சான்று வழங்க முதியவரிடம் ரூ.4,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ,வை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த முருகன்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணிமொழி,80; இவர், முதியோர் உதவித் தொகை பெறுவதற்காக 2 மாதங்களுக்கு முன் வாரிசு சான்று கோரி விண்ணப்பித்தார்.
இவரது மனுவை பரிசீலித்த துறையூர் வி.ஏ.ஓ., சம்பத்குமார் ரூ.4,500 கொடுத்தால் உடனே சான்றிதழ் வழங்குவதாக கூறினார்.
அதில் அதிர்ச்சயடைந்த மணிமொழி, கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் அறிவுரையின் பேரில், நேற்று பகல் 2:00 மணிக்கு துறையூர் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு சென்ற மணிமொழி, போலீசார் வழங்கிய ரசாயன பவுடர் தடவிய ரூ.4,500ஐ கொடுத்தார்.
அதனை வாங்கிய வி.ஏ.ஓ., சம்பத்குமாரை, கூடுதல் எஸ்.பி., தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சம்பத்குமார் வீட்டில் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றினர்.
பின்னர் சம்பத்குமாரை, கடலுார் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

