/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை உட்கோட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்வு; போலீசாரின் பணிச்சுமைக்கு தீர்வு: பொதுமக்கள் மகிழ்ச்சி
/
விருதை உட்கோட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்வு; போலீசாரின் பணிச்சுமைக்கு தீர்வு: பொதுமக்கள் மகிழ்ச்சி
விருதை உட்கோட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்வு; போலீசாரின் பணிச்சுமைக்கு தீர்வு: பொதுமக்கள் மகிழ்ச்சி
விருதை உட்கோட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்வு; போலீசாரின் பணிச்சுமைக்கு தீர்வு: பொதுமக்கள் மகிழ்ச்சி
ADDED : ஆக 06, 2025 08:00 AM
விருத்தாசலம் உட்கோட்டத்தில் விருத்தாசலம் நகரம், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன், கம்மாபுரம், கருவேப்பிலங்குறிச்சி, ஆலடி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை ஆகிய போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இவற்றை ஒருங்கிணைத்து டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் பணிபுரிகிறார்.
இதில், விருத்தாசலம் நகரில் உள்ள 33 வார்டுகள், ஊரக பகுதியில் 25க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருப்பதால் சட்டம் ஒழுங்கு, குற்ற நடவடிக்கைகளை கையாள்வதில் பெரும் சவால் ஏற்படுகிறது. ஆதாயக் கொலைகள் இல்லாவிட்டாலும் முன்விரோதம், பழிக்குப்பழி போன்ற கொலைகள் அவ்வப்போது நடக்கிறது.
கடந்த காலங்களில் வீடு புகுந்து திருட்டு, கோவில் உண்டியல்கள் உடைப்பு சம்பவங்கள் அதிகமாக நடந்தன. இதற்கிடையே, கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்சில் வந்த நகைக்கடை ஊழியரிடம் 52 சவரன் நகைகள் பறிப்பு சம்பவமும் அரங்கேறியது.
விருத்தாசலம் உட்கோட்டத்தில் விருத்தாசலம், கம்மாபுரம், கருவேப்பிலங்குறிச்சி ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இன்ஸ்பெக்டரும்; மங்கலம்பேட்டை, ஆலடி போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு இன்ஸ்பெக்டரும், பெண்ணாடம் மற்றும் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு இன்ஸ்பெக்டரும் என புணிபுரிகின்றனர்.
இதனால், விருத்தாசலம் நகரம், தாலுகா என இரு போலீஸ் ஸ்டேஷன்களாக பிரித்து, கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என 'தினமலர்' நாளிதழில் செய்திகள் வெளியானது. இது தொடர்பாக சிட்டிங் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தும், இதுநாள் வரை தமிழக அரசு செவி மடுக்கவில்லை.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் 280 போலீஸ் ஸ்டேஷன்களை தரம் உயர்த்தி, கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்படும் என, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், விருத்தாசலம் உட்கோட்டம் கம்மாபுரம், கருவே ப்பிலங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தனித்தனி இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதனால், வழக்கமான பணியில் இருந்து சற்று ஆறுதல் கிடைக்கும் என போலீசாரும் பெருமூச்சு விட்டுள்ளனர்.
அதுபோல், தனித்தனி இன்ஸ்பெக்டர்கள் பணிக்கு வரும்போது, கம்மாபுரத்தில் அதிகப்படியான என்.எல்.சி., பிரச்னைக்கும், கருவேப்பிலங்குறிச்சியில் வழிப்பறி, கொலை, கொள்ளை சம்பவங்களை தடுத்து நிறுத்தி எளிதில் தீர்வு காண முடியும் என்பதால் மக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

