/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'எம்.ஜி.ஆர்., காலத்தோடு போச்சு எம்.எல்.ஏ., கனவு' அதிருப்தியில் திட்டக்குடி அ.தி.மு.க., நிர்வாகிகள்
/
'எம்.ஜி.ஆர்., காலத்தோடு போச்சு எம்.எல்.ஏ., கனவு' அதிருப்தியில் திட்டக்குடி அ.தி.மு.க., நிர்வாகிகள்
'எம்.ஜி.ஆர்., காலத்தோடு போச்சு எம்.எல்.ஏ., கனவு' அதிருப்தியில் திட்டக்குடி அ.தி.மு.க., நிர்வாகிகள்
'எம்.ஜி.ஆர்., காலத்தோடு போச்சு எம்.எல்.ஏ., கனவு' அதிருப்தியில் திட்டக்குடி அ.தி.மு.க., நிர்வாகிகள்
ADDED : டிச 17, 2025 06:37 AM
சு தந்திர இந்தியாவில் கடந்த, 1951ம் ஆண்டு நடந்த முதல் பொதுத்தேர்தலில் தற்போதைய கடலுார் மாவட்டத்தில் கடலுார், விருத்தாசலம், பண்ருட்டி, புவனகிரி, சிதம்பரம் ஆகிய 5 தொகுதிகள் மட்டுமே இருந்தன. பின் கடந்த, 1957 ம் ஆண்டு நடந்த இரண்டாம் பொதுத்தேர்தலுக்கு முன் நடந்த தொகுதி மறுசீரமைப்பில் 6வது தொகுதியாக நல்லுார் உருவானது.
கடந்த 1957 மற்றும் 1962ம் ஆண்டு தேர்தல்களுக்குப்பின் நல்லுார் தொகுதி, மங்களூர் (தனி) தொகுதியாக மாற்றப்பட்டது. அதன்பின் கடந்த, 2006ம் ஆண்டு வரை 10 பொதுத்தேர்தல்களை சந்தித்த மங்களூர் தொகுதி, 2008ம் ஆண்டு நடந்த மறுசீரமைப்பில் சிறு மாற்றங்களுடன் திட்டக்குடி (தனி) தொகுதியாக உருவாக்கப்பட்டது.
அதில் எம்.ஜி.ஆர்.,தலைமையிலான அ.தி.மு.க., கடந்த, 1977 தேர்தல் முதல் போட்டியிட்டது. கடந்த, 1977ல் அ.தி.மு.க., பெரியசாமி, 1980 ல் அ.தி.மு.க.,கலியமூர்த்தி, 1984ல் அ.தி.மு.க., தங்கராஜூ ஆகியோர் வெற்றிபெற்றனர்.
எம்.ஜி.ஆர்.,மறைவுக்குப்பின் ஜெ., ஜா., அணியாக 1989 தேர்தலை சந்தித்தனர். அப்போது தி.மு.க.,கணேசன் வெற்றிபெற்ற நிலையில், ஜெ.,அணி வேட்பாளர் ராமலிங்கம் இரண்டாம் இடம் பிடித்தார்.
கடந்த, 1991 தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் காங்.,வேட்பாளர் புரட்சிமணி, 1996 தேர்தலில் தி.மு.க.,கூட்டணியில் த.மா.கா.,வேட்பாளர் புரட்சிமணி, 2001 தேர்தலில் தி.மு.க.,கூட்டணியில் திருமாவளவன், 2006 தேர்தலில் அ.தி.மு.க.,கூட்டணியில் வி.சி.,வேட்பாளர் செல்வப்பெருந்தகை, 2011 தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., வேட்பாளர் தமிழழகன், 2016 மற்றும் 2021 தேர்தல்களில் தி.மு.க., சார்பில் அமைச்சர் கணேசன் வெற்றி பெற்றார்.
கடந்த, 2004ம் ஆண்டு வி.சி.,கட்சி தலைவர் திருமாவளவன் தனது பதவியை ராஜினாமா செய்த பின் நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க., கணேசன் வெற்றி பெற்றார்.
கடந்த, 1977 முதல் 2021 வரை நடந்த 11 தேர்தல் மற்றும் 2004 இடைத்தேர்தல் முடிவின்படி, தி.மு.க.,கூட்டணி 6 முறையும், அ.தி.மு.க.,கூட்டணி 6 முறையும் வெற்றிபெற்றுள்ளனர்.
அ.தி.மு.க., கடந்த, 1977, 1980, 1984 தேர்தல்களிலும் மற்றும் அக்கட்சி கூட்டணியில் 1991 தேர்தலில் காங்., 2006 தேர்தலில் வி.சி., 2011 தேர்தலில் தே.மு.தி.க., வெற்றிபெற்றது.
எம்.ஜி.ஆர்.,காலத்தில் நடந்த, 3 தேர்தல்களில் போட்டியிட்டு 3 முறையும் வெற்றிபெற்றனர். ஆனால் அவரது மறைவிற்குப்பின் நடந்த தேர்தல்களில் கடந்த, 2004 இடைத்தேர்தல் மற்றும் 2016 பொதுத்தேர்தலில் மட்டுமே அ.தி.மு.க., போட்டியிட்டு தோல்வியடைந்தது.
எம்.ஜி.ஆர்.,காலத்தில் நடந்த, 3 தேர்தல்களில் போட்டியிட்டு, 3 முறையும் வெற்றிபெற்றனர். ஆனால் அதன்பின் நடந்த, 9 தேர்தல்களில் 2 முறை மட்டுமே போட்டியிட்டது. மூன்று முறை கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு உதவியது.
கடந்த, 1984க்குப்பின் தமிழகத்தில், 1991, 2001, 2011, 2016 என 4 முறை அ.தி.மு.க., ஆட்சியை பிடித்தது. ஆனாலும், திட்டக்குடி தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க.,நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கிடைக்காததால், எம்.ஜி.ஆர்., காலத்தில் 3 முறை தொடர்ந்து வெற்றி பெற்ற தொகுதியில் தற்போதுவரை ஒருமுறை கூட வெற்றிபெற முடியாததால், ஒரு அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கூட உருவாகவில்லை என தொண்டர்கள் வேதனையில் உள்ளனர்.
எம்.ஜி.ஆர்.,காலத்தோடு போச்சு எங்களின் எம்.எல்.ஏ.,கனவு என மூத்த நிர்வாகிகள் பலர் புலம்புகின்றனர். இம்முறை கூட்டணிக்கு தொகுதியை தாரை வார்க்காமல் அ.தி.மு.க.,விற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

