/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரேஷன் கடையில் வழங்கப்படும் எண்ணெய் பாட்டில்கள் குவிந்து கிடந்ததால் பரபரப்பு

ADDED : அக் 19, 2024 04:42 AM

விருத்தாசலம், : விருத்தாசலம் வேளாண் கூட்டுறவு சங்க வளாகத்தில் தேங்காய் எண்ணெய் டப்பாக்கள் குவிந்து கிடந்ததால் பரபரப்பு நிலவியது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு மூலம் பொது வினியோக திட்டப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அந்தந்த ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பாமாயில், கோதுமை, டீத்துாள், உப்பு, சோப்பு, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், விருத்தாசலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில், ஆயிரக்கணக்கான தேங்காய் எண்ணெய் டப்பாக்கள் குவியல் குவியலாக கிடந்தன. இவற்றில் எண்ணெய் வெளியேறிய நிலையில், காலி டப்பாக்களாக இருந்தன.
டப்பாக்களில் காலவாதி தேதி அழிந்த நிலையில் இருந்தன. எண்ணெய் டப்பாக்கள் எடுத்து வரும்போது சேதமடைந்தனவா அல்லது காலாவதியானதால் துாக்கி வீசப்பட்டதா என தெரியவில்லை. குவிந்து கிடக்கும் டப்பாக்களை குரங்குகள் எடுத்து குடிக்கின்றன.
பெரியார் நகர் குளிர்சாதன பயணியர் நிழற்குடைக்கு பின்புறம் குவிந்து கிடப்பதால் அவற்றை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.