/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பல்கலை., விடுதி உணவில் பூரான் கிடந்ததால் பரபரப்பு
/
பல்கலை., விடுதி உணவில் பூரான் கிடந்ததால் பரபரப்பு
ADDED : பிப் 19, 2024 11:38 PM
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக., மாணவர் விடுதியில் மதிய உணவில் பூரான் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல வளாகத்தில், மாணவர் விடுதி, 'காவேரி இல்லம்' உள்ளது. இந்த விடுதியில் நேற்று மதிய உணவுடன் கத்திரிக்காய் பொறியல் வழங்கப்பட்டது. அதில் பூரான் இருந்ததாக மாணவர்கள் எடுத்து காண்பித்தனர். இதனால் அச்சமடைந்த மாணவர்கள் மதிய உணவை சாப்பிடாமல் புறக்கணித்தனர். மேலும் மாணவர்கள் திரளாக விடுதி முன்பு கூடினர்.
இதனையடுத்து பொறியியல் புல முதல்வர் கார்த்திகேயன், விடுதி வார்டன் ராஜ்குமார் ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.
தகவலறிந்த சிதம்பரம் உணவு பாதுகாப்பு அலுவலர் அருண்மொழி விடுதிக்கு சென்று ஆய்வு செய்து, உணவை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். ஒப்பந்தகாரருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் உணவு கூடத்தை சுத்தமாக வைத்திருக்க எச்சரிக்கை செய்தார்.

