/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி அந்தரத்தில் தொங்கிய லாரி
/
பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி அந்தரத்தில் தொங்கிய லாரி
பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி அந்தரத்தில் தொங்கிய லாரி
பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி அந்தரத்தில் தொங்கிய லாரி
ADDED : மார் 11, 2024 06:02 AM

சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அடுத்த கரைமேடு பரவனாறு 5 கண் மதகு பாலத்தின் தடுப்பு கட்டையில் ஜல்லி ஏற்றி சென்ற டிப்பர் லாரி மோதி அந்தரத்தில் தொங்கியபடி நின்றதால் போக்குவரத்து பாதித்தது.
சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை சேத்தியாத்தோப்பு அடுத்த கரைமேடு பரவனாறு 5 கண் மதகு குறுகிய பாலம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது.
பாலத்தின் வழியாக சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், வேலுார், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்களும், கனரக வாகனங்கள் , டாரஸ், டிப்பர்லாரிகள் என 24 மணி நேரமும் ஓய்வில்லாமல் சென்று வருகின்றன.
பாலம் ஏற்கனவே பழுதடைந்துள்ள நிலையில் நேற்று மதிய 1.30 மணியளவில் வி.கே.டி., சாலை பணிக்காக வடலுார் நோக்கி தார் கலந்த ஜல்லி கலவை ஏற்றி சென்ற டிப்பர் லாரி தடுப்பு கட்டையில் மோதி அந்தரத்தில் தொங்கியபடி நின்றது.
இதனால் தென்மாவட்டங்களுக்கு, வடமாவட்டங்களுக்கு செல்லும் பஸ் போக்குவரத்து முற்றிலும் பாதிப்பிற்குள்ளானது. இருசக்கர வாகனங்கள், வேன்கள், கார்கள் என பாலத்தில் செல்லமுடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
அவசர தேவைகளுக்கு செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் பாலத்தினை கடந்து செல்ல வெகுநேரம் காத்திருந்து சென்றனர்.அந்தரத்தில் தொங்கிய லாரியை கிரேன் மூலம் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்டனர். அதனை தொடர்ந்து போக்குவரத்து 2.30 மணிக்கு பிறகு சீரானது.
பின் வாகனங்கள் செல்லத்துவங்கின. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

