/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிருஷ்ணாபுரம் வனத்தில் தடுப்பணை நிரம்பியது
/
கிருஷ்ணாபுரம் வனத்தில் தடுப்பணை நிரம்பியது
ADDED : அக் 17, 2024 04:54 AM

சிறுபாக்கம்: சிறுபாக்கம் பகுதியில் பெய்த தொடர் மழையால், கிருஷ்ணாபுரம் வனத்தில் தடுப்பணை நிரம்பியது.
கடலுார் - சேலம் தேசிய நெடுஞ்சாலையொட்டி, சிறுபாக்கம் அடுத்த கிருஷ்ணாபுரம் வனப்பகுதி உள்ளது.
இங்கு, வன விலங்குகள், பறவைகளின் குடிநீர் தேவைக்காக 10க்கும் மேற்பட்ட தடுப்பணைகள், ஜெ.,ஜெ., வடிவ கான்கிரீட் சிமென்ட் தொட்டிகள் அமைக்கப்பட்டது.
இதன் மூலம், வன விலங்குகளின் குடிநீர் தேவை பூர்த்தி அடைந்த நிலையில், வனத்தையொட்டிய விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக சிறுபாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் பரவலாக மழை பெய்தது.
இதனால், கிருஷ்ணாபுரம் வனத்திலுள்ள தடுப்பணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில், நேற்று காலை தடுப்பணை நிரம்பி, மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது.

