/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜாக்டோ- ஜியோ சார்பில் வேலை நிறுத்த மாநாடு
/
ஜாக்டோ- ஜியோ சார்பில் வேலை நிறுத்த மாநாடு
ADDED : டிச 28, 2025 06:08 AM

கடலுார்: கடலுாரில் ஜாக்டோ - ஜியோ சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடந்தது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வரும் 6ம் தேதி நடக்கிறது. இது தொடர்பான ஆயத்த மாநாடு கடலுாரில் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அம்பேத்கர், தனசேகரன் முன்னிலை வகித்தனர். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் ஜெகநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர் பாக்கியராஜ் பேசினர்.
பட்டதாரி ஆசிரியர் கழக மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் குமரவேல், ஓய்வூதியர் கூட்டமைப்பு தலைவர் புருஷோத்தமன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ரமேஷ், அரசு பணியாளர் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவர் நல்லதம்பி உட்பட பலர் பங்கேற்றனர்.

