/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பரவனாற்றில் சவுமியா 'திடீர்' ஆர்ப்பாட்டம்
/
பரவனாற்றில் சவுமியா 'திடீர்' ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 28, 2025 04:54 AM

சேத்தியாத்தோப்பு: பரவனாற்றை பசுமை தாயக அமைப்பின் தலைவர் சவுமியா, பார்வையிட்டு, 'திடீர்' ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
கடலுார் மாவட்டத்திற்கு பசுமை தாயக அமைப்பின் தலைவர் சவுமியா வருகை தந்தார். அவர், கரைமேடு அருகே உள்ள பரவனாற்றினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் நெய்வேலி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் பழுப்பு நிற கழிவு நீர் பரவானற்றை அசுத்தப்படுத்தி வருதாக கூறி திடீரென விவசாயிகளுடன் இணைந்து, மதியம் 12:00 மணியளவில் 'திடீர்'ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம் நிலக்கரி எடுக்க பல ஆயிரம் அடி ஆழத்தை தோண்டி வருகிறது. கரி வெட்டும்போது வெளியேற்றப்படும் பழுப்பு நிற கழிவு நீர் வாலாஜா ஏரி, பரவனாற்றை பாழ்படுத்தி வருகிறது.
விவசாயிகள் பயன்பெறும் வகையில், சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை வடிகட்டி அனுப்ப வேண்டும்.
பரவனாற்றில் கழிவு நீர் கலந்தால், நெய்வேலி என்.எல்.சி., நிர்வாகத்தினை கண்டித்து விவசாயிகளை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். டெல்டா பகுதி கடைமடை பாசன பகுதி வாய்க்கால்கள், கால்வாய்கள், ஏரிகள், துார்வாரப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டம் முடிந்து மதியம் 12:30 மணியளவில் விவசாயிகள், நிர்வாகிகள் கலைந்து சென்றனர். இதில், மாவட்ட செயலாளர்கள் சண்முத்துகிருஷ்ணன், கார்த்திகேயன், ரவிச்சந்திரன், செல்வமகேஷ், மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் பழதாமரைக்கண்ணன், மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, மாநில மாணவரணி செயலாளர் விஷ்ணு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

