/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தாசில்தார் பேச்சுவார்த்தையில் சுமூகம்: வணிகர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
/
தாசில்தார் பேச்சுவார்த்தையில் சுமூகம்: வணிகர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
தாசில்தார் பேச்சுவார்த்தையில் சுமூகம்: வணிகர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
தாசில்தார் பேச்சுவார்த்தையில் சுமூகம்: வணிகர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
ADDED : மார் 02, 2024 06:03 AM

பண்ருட்டி : வி.கே.டி., சாலை பணியை விரைந்து முடிப்பதாக நகாய் அதிகாரிகள் கூறியதால், வணிகர்களின் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கண்டரக்கோட்டை- சித்திரைசாவடி வரை வி.கே.டி., தேசிய நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக மாறி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நேற்று முன்தினம் ஜல்லி கொட்டும் போராட்டம் நடந்தது.
தொடர்ந்து வரும் 5ம் தேதி தாலுகா அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம், 9ம் தேதி கடையடைப்பு மற்றும் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவித்திருந்தனர்.
இது தொடர்பாக பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் நேற்று பேச்சு வார்த்தை நடந்தது. தாசில்தார் ஆனந்த் தலைமை தாங்கினார். ரிலையன்ஸ் இன்ப்ராஸ்டெக்சர் நிறுவன பொது மேலாளர் ஜனார்த்தனன் மணியேறி, தஞ்சாவூர் நகாய் சாலை பொறியாளர் செல்வராஜ், டீம் லீடர் ஜோசப் ஆண்டனி, பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன் முன்னிலை வகித்தனர்.
இதில், வரும் 7ம் தேதிக்குள் பேட்ஜ் ஒர்க் மற்றும் ஏப்ரல் 15ம் தேதிக்குள் சர்வீஸ் சாலை பணிகள் முடிக்கப்படும் எனவும், மே 31ம் தேதிக்குள் வி.கே.டி., சாலை பணி முழுவதும் நிறைவுபெறும் என நகாய் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனால், வணிகர் சங்கத்தினர் வரும் 5ம் தேதி ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர்.
அப்போது, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம், செயலர் வீரப்பன், தமிழ்நாடு முந்திரி ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் மலர்வாசகம், செயலாளர் ராமகிருஷ்ணன், லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் வெங்கடேசன், பாலுார் வர்த்தக சங்க செயலாளர் குமரன், சந்துரு, சிவகுரு, சரவணன், சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

