/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சார் பதிவாளர் அலுவலக கட்டடம் திறப்பது எப்போது அமைச்சருக்காக காத்திருப்பு

ADDED : அக் 23, 2024 06:31 AM

நெல்லிக்குப்பம் சார் பதிவாளர் கட்டடம் பழுதடைந்ததால், ரூ. 1 கோடியே 10 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்ட டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்தது. தற்காலிகமாக சார் பதிவாளர் அலுவலகம் ஒரு ஆண்டுக்கு மேலாக அருகில் உள்ள தனியார் வாடகை இடத்தில் செயல்பட்டு வருகிறது. புதிய கட்டடப் பணி முடிந்து ஒரு மாதத்துக்கு மேலாகிறது. ஆனால் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் வாடகை கட்டடத்திலேயே சார் பதிவாளர் அலுவலகம் தொடர்ந்து செயல்படுகிறது. குறுகலான சந்து பகுதியில் இயங்குவதால், அங்கு வருவோர் மற்றும் அலுவலகம் அமைந்துள்ள பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்
இந்த அலுவலகம் பத்திர பதிவு துறை அமைச்சர் வருகைக்காக திறக்கபடாமல் இருப்பதாக தெரிகிறது.
பொதுமக்களின் நலன் கருதி உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளை கொண்டு கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் எதிர்பாக்கின்றனர்.