/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எஸ்.ஐ., எழுத்து தேர்வு பயிற்சி வகுப்பு துவக்கம்
/
எஸ்.ஐ., எழுத்து தேர்வு பயிற்சி வகுப்பு துவக்கம்
ADDED : மே 02, 2025 05:25 AM

கடலுார்: கடலுாரில் சப் இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை எஸ்.பி., துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும், சப்இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் பங்கேற்க உள்ள காவல்துறையில் பணியாற்றும் போலீசார் மற்றும் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட காவல்துறை சார்பில் கடலுாரில் இலவச பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எஸ்.பி.,ஜெயக்குமார், இலவச பயிற்சி வகுப்பை துவக்கி வைத்துப் பேசுகையில், 'தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், தேர்வு எழுதும் வரை இதர கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் தராமல், அர்ப்பணிப்புடன் படித்து தேர்வில் வெற்றி பெற வேண்டும்' என்றார்.
ஏ.டி.எஸ்.பி.,நல்லதுரை, டி.எஸ்.பி.,அப்பாண்டராஜ், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் அருட்செல்வன், ஆகாஷ் அகாடமி பயிற்றுனர்கள் சுபஸ்ரீ, ஆனந்தன், பள்ளி ஆசிரியர் முருகன், சப் இன்ஸ்பெக்டர் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.

