/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவில் கட்டுமான பணியை நிறுத்த சிவனடியார்கள் மனு
/
கோவில் கட்டுமான பணியை நிறுத்த சிவனடியார்கள் மனு
ADDED : மார் 21, 2024 12:11 AM

திட்டக்குடி, :திட்டக்குடி வைத்தியநாதசாமி கோவில் வளாகத்தில், அலுவலகம் கட்டும் பணிகளை நிறுத்தக்கோரி, சிவனடியார் கூட்டமைப்பு சார்பில் தாசில்தார், டி.எஸ்.பி., உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில், திட்டக்குடியில் 1,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அசனாம்பிகை உடனுறை வைத்தியநாதசாமி கோவில் உள்ளது.
இக்கோவில் விநாயகர் சன்னதி முன்பாக, அறநிலையத்துறை ஆய்வாளர் அலுவலகம் கட்டும் பணி நடக்கிறது.
தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கோவில்களில் எந்த ஒரு புதிய கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாது என கோர்ட் உத்தரவு உள்ளது. அதை மீறி, வைத்தியநாதசாமி கோவிலில் கட்டுமான பணி நடப்பது ஆகம விதிகளுக்கும், இந்துமத நம்பிக்கைகளுக்கும் எதிரானது.
எனவே, கட்டுமானப்பணிகளை நிறுத்த வேண்டும். சட்டவிரோத கட்டுமானப்பணிகள் செய்ய உத்தரவிட்ட செயல்அலுவலர், தக்கார் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில் ஏப்ரல் 11ம் தேதி, சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

