/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு குடிகாடு ஊராட்சியில் தீர்மானம்
/
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு குடிகாடு ஊராட்சியில் தீர்மானம்
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு குடிகாடு ஊராட்சியில் தீர்மானம்
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு குடிகாடு ஊராட்சியில் தீர்மானம்
ADDED : நவ 12, 2024 06:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அடுத்த குடிகாடு கிராமத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது.
ஊராட்சி தலைவர் தேவி சிவக்குமார் தலைமை தாங்கினார். பா.ம.க., மாவட்ட செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான முத்துக்கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். இதில் குடிகாடு ஊராட்சியை, கடலுார் மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
அப்போது, ஊராட்சி செயலாளர் குமரேசன் மற்றும் குடிகாடு, ஈச்சங்காடு, ராசாப்பேட்டை, சங்கொலிக்குப்பம் ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.