/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குறைக்கேட்புக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
குறைக்கேட்புக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
குறைக்கேட்புக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
குறைக்கேட்புக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : பிப் 20, 2024 03:21 AM

கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைக்கேட்புக் கூட்டத்தில், 1 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைகேட்பு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி மனுக்கள் பெற்றார். மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள் வருகை தந்து மனுக்கள் அளித்தனர்.
கூட்டத்தில் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, ஆக்கரமிப்பு அகற்றம், கல்வி உதவித்தொகை கேட்டு 890 மனுக்கள், பொதுமக்கள் வழங்கினர்.
கூட்டத்தில் மனுக்கள் மீதான உடனடி தீர்வாக 10 ஆயிரம் மதிப்பில் 2 மாற்றுத் திறனாளிகளுக்கு காதொளி கருவி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் ஒருவருக்கு. 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பேட்டரி சக்கர நாற்காலி ஒருவருக்கு, 34 ஆயிரத்து 272 மதிப்பில் எலக்ட்ரானிக் பிரெய்லி ரீடர் கருவி ஒருவருக்கு என, மொத்தம் 1 லட்சத்து 41 ஆயிரத்து 272 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். விருத்தாசலம் வட்டத்தில் 3 பேர், காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா ஆணை வழங்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன கூட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நடந்த பன்முக கலாசார போட்டிகளில் வெற்றி பெற்ற குழுக்களுக்கு கலெக்டர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

