/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் ரயில் நிலையத்தில் மரத்தை அகற்ற எதிர்ப்பு
/
சிதம்பரம் ரயில் நிலையத்தில் மரத்தை அகற்ற எதிர்ப்பு
சிதம்பரம் ரயில் நிலையத்தில் மரத்தை அகற்ற எதிர்ப்பு
சிதம்பரம் ரயில் நிலையத்தில் மரத்தை அகற்ற எதிர்ப்பு
ADDED : பிப் 09, 2024 06:45 AM

சிதம்பரம்: சிதம்பரம் ரயில் நிலையத்தில் 60 ஆண்டு கால மரத்தை அகற்றாமல், மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிதம்பரம் ரயில் நிலையம், மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. புதிய கட்டிடம், நவீன வடிவமைப்பு உள்ளிட்ட அனைத்து உள் கட்டமைப்புகளுடன், 5.97 கோடி நிதியில் ்பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. அதற்காகன முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளது.
இந்நிலையில், சிதம்பரம் ரயில் நிலைய வாயிலில், 60 ஆண்டு கால வேப்ப மரம் பயணிகளுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் நிலையில், அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையறிந்த சிதம்பரம் வர்த்தக சங்கம், ரயில் பயணிகள சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள், மரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ரயில்வே நிர்வாகம் மற்றும் கலெக்டருக்கு, மரத்தை அகற்றாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

