/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பேனர் வைத்தால் வழக்கு: இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை
/
பேனர் வைத்தால் வழக்கு: இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை
ADDED : செப் 24, 2024 05:55 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பகுதியில் அனுமதியின்றி பேனர் வைத்தால் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.
நெல்லிக்குப்பம் பகுதிகளில் சமீப காலமாக பேனர் கலாசாரம் அதிகரித்துள்ளது. இதனால் விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
எனவே, பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று, நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர்கள் ஜவ்வாதுஉசேன், தெய்வநாயகம் ஆகியோர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.
அனைத்து கட்சியினர், வர்த்தக சங்கத்தினர், பொதுநல அமைப்பினர் கலந்து கொண்டனர். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பேசுகையில், பேனர்கள் வைப்பதால் விபத்துகள் நடக்கும் அபாயம் உள்ளது. எனவே பேனர் வைக்க ஒதுக்கப்படும் இடத்தில் மட்டும் சிறிய அளவில் பேனர்கள் வைக்கலாம். உரிய அனுமதி பெற்றே வைக்க வேண்டும்.
அனுமதியில்லாமல் வைத்தால் வழக்கு போடப்படும். தலைவர்கள் சிலைகளை மறைத்து பேனர் வைக்கக் கூடாது. சுப நிகழ்ச்சிகள் நடக்கும் மண்டப வளாகத்திலேயே பேனர் வைக்க வேண்டும். பொது இடத்தில் வைக்க கூடாது. போதை பொருட்கள் இல்லாத நகரமாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும். போதை பொருட்கள் விற்பனை பற்றி தகவல் கொடுத்தால் ரகசியம் காக்கப்படும். அனைவரும் போலீசாரின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

