/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுத்திறனாளிகள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
/
மாற்றுத்திறனாளிகள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 21, 2024 07:46 AM

கடலுார்: கடலுார் மாற்றுத்திறனாளிகளின் லட்சிய முன்னேற்ற சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலுாரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். மகளிரணி மீனா, மாவட்ட செயலாளர் சித்ரா முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் வரவேற்றார். மாநில தலைவர் சந்தோஷ் உரையாற்றினார்.
இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாத உதவி தொகையை 3000 ரூபாயாகவும், கடும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.
அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் தமிழகம் முழுவதும் அரசு பஸ்சில் சென்றுவர இலவச பயண அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது, நிர்வாகிகள் தில்லைநாயகம், சர்க்கரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

