/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் நிதி திரட்டி சாலை அமைத்த மக்கள்
/
கடலுாரில் நிதி திரட்டி சாலை அமைத்த மக்கள்
ADDED : ஏப் 06, 2025 06:42 AM

கடலுார் : கடலுாரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்களே நிதி திரட்டி சிமெண்ட் சாலை அமைத்தனர்.
கடலுார் வன்னியர்பாளையம் மேட்டுத்தெரு, சாம்பசிவம் நகர் இணைப்பு சாலை கடந்த 50 ஆண்டுகளாக மண் சாலையாகவே இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அந்த வழியாக செல்வதில் சிரமம் அடைந்தனர். இணைப்பு சாலை அமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும், அதிகாரிகள் சாலை அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட சாம்பசிவம் நகர், மேட்டு தெரு, வடிவேல் நகர், ராமராஜ் நகர் பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி சாலை அமைக்க முடிவு செய்தனர். அதன்படி 60க்கும் மேற்பட்டவர்களிடம் 50,000 ரூபாய் நிதி திரட்டினர்.
இதையடுத்து நேற்று மேட்டுத் தெரு, சாம்பசிவம் நகர் இணைப்பு சாலை அமைக்கும் பணி நடந்தது. 150 அடி நீளத்திற்கு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.

