/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி சிதம்பரத்தில் பாண்டியன் எம்.எல்.ஏ., பேச்சு

ADDED : செப் 30, 2024 06:11 AM

சிதம்பரம்: சிதம்பரம், அண்ணாமலைநகர் பேரூராட்சியில் அ.தி.மு.க., சார்பில், புதிய உறுப்பினர் உரிமை சீட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட இளைஞரணி செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், ஒன்றிய அவைத் தலைவர் பேராசிரியர் ரெங்கசாமி, குமராட்சி இளஞ்செழியன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி வரவேற்றார்.
கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., உறுப்பினர் அட்டைகளை வழங்கி, பேசுகையில், சொன்னதை செய்வது அ.தி.மு.க., சொன்ன வார்த்தைகளை நிறைவேற்றாத கட்சி தி.மு.க., வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி அமையும்' என்றார்.
நிர்வாகிகள் சுந்தரம், செங்குட்டுவன், வச்சலா, ரவி, கிருஷ்ணமூர்த்தி, ஜெயக்குமார், கணேசன், சந்தோஷ், வசந்தி, பிரகாஷ், ராமு, சக்திவேல், கோகுல்ராஜ், ரமணி, கார்த்தி, சீத்தாராமன், சக்திவேல் நாராயணன், கோபால், நாகராஜ், ரகுநாத், காசிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கார்த்தி நன்றி கூறினார்.