ADDED : டிச 19, 2025 06:34 AM

நெய்வேலி: நெய்வேலி தொகுதிக்குட்பட்ட நடுக்குப்பம் ஊராட்சி சொரத்தாங்குழி மற்றும் வல்லம் ஊராட்சி மானடிக்குப்பம் ஆகிய கிராமங்களில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டன.
இந்த கடைகளை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். அவர் பேசுகையில், 'நெய்வேலி தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களின் வளர்ச்சி மற்றும் கிராம மக்களின் அடிப்படை தேவைகளை செய்து வருகிறோம். அனைத்து கிராமப்பகுதிகளுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருவதுடன், கிராமப்புறங்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறோம்,' என்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், பி.டி.ஓ., மீரா கோமதி,பாபு, பொறியாளர் சங்கர், செயலாளர் சதாசிவம், முன்னாள் கவுன்சிலர்கள் அருள்முருகன், ஞானசேகர், டாக்டர் செந்தில், புருஷோத்தமன், ராஜசேகர், பொன்னம்பலம், வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன், ஏழுமலை, ராமர், சின்னதுரை, ராகவன், அமுதா, ராஜேந்திரன், ராமகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், குப்புசாமி, சண்முகம், வேல்முருகன், சண்முகம், பழனிவேல், ஜெயலட்சுமி மற்றும் ஊராட்சி செயலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

