/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குரங்குகள் அட்டகாசம்: பிடிக்க நடவடிக்கை தேவை
/
குரங்குகள் அட்டகாசம்: பிடிக்க நடவடிக்கை தேவை
ADDED : பிப் 26, 2024 05:49 AM
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளையில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் 30 க்கும் மேற்பட்ட குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த குரங்குகள் நிலத்தில் பயிரிட்டுள்ள வேர்க்கடலை, காய்கறிகள் செடிகள் உள்ளிட்ட பயிர்களை பிடுங்கி சேதப்படுத்துகின்றன. மேலும் வீட்டுத்தோட்டத்தில் வைத்துள்ள தென்னை மரங்கள், கொய்யா மரங்கள், வாழை மரங்கள், நெல்லி மரங்களில் உள்ள காய்களை பறித்து சேதப்படுத்துகின்றன.
அதுமட்டுமின்றி வீடுகளின் உள்ளே புகுந்து, உணவு பொருட்களை கீழே கொட்டி சேதப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.
குரங்குகளை துரத்தும் பொதுமக்களை கடிக்க பாய்வதால் பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.
எனவே இப்பகுதி மக்கள் நலனை கருத்தில்கொண்டு, வனத்துறை அதிகாரிகள் சேந்திரக்கிள்ளை பகுதியில் அட்டகாசம் செய்து வரும், குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

