/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காத்திருப்போர் கூடம் எம்.எல்.ஏ., திறப்பு
/
காத்திருப்போர் கூடம் எம்.எல்.ஏ., திறப்பு
ADDED : செப் 14, 2025 02:40 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு வடக்குமேட்டுத் தெருவில் புவனகிரி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 15 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை, ரூ. 5.50 லட்சம் மதிப்பில் காத்திருப்போர் கூடம் திறப்பு விழா நடந்தது.
அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, சிமென்ட் சாலை மற்றும் காத்திருப்போர் கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மாநில எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் இளஞ்செழியன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாநில துணை செயலாளர் செஞ்சிலட்சுமி, அருளழகன், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயப்பிரியா, மகளிரணி நகர செயலாளர் மணிகண்டன், ஜபாருல்லா, சர்புதீன், வார்டு கவுன்சிலர் முருகேசன், தெய்வராஜகுரு, மாரியப்பன், பிரபாகரன், பாலசுந்தரம் பங்கேற்றனர்.