ADDED : டிச 23, 2025 04:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் கிழக்கு மாவட்ட ம.தி.மு.க, செயற்குழு கூட்டம், தனியார் ஓட்டலில் நடந்தது.
அவைத்தலைவர் சட்டநாதன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் ராமலிங்கம் , பொருளாளர் செந்திலதிபன், மாநில துணை செயலாளர் மணி பேசினார்.
இந்த கூட்டத்தில், வைகோ தலைமையில் நடைபெறும் சமத்துவ நடைபயணம் சரித்திர வெற்றி பயணமாக அமையும் வகையில் தொண்டர் படையினர் பணியாற்ற வேண்டும்; கூட்டணி பேச்சு வார்த்தையின்போது, கடலுார் மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியை கேட்டு பெற வேண்டும்; கடலுார் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஏற்படுகிற போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண கலெக்டருக்கு கோரிக்கை விடுக்க வேண்டும்; என்பன, உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இளைஞரணி துணை செயலாளர் சாரஞ்சி சிவராமன் நன்றி கூறினார்.

