/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ராகவேந்திரா கல்லுாரியில் கணித துறை கருத்தரங்கு
/
ராகவேந்திரா கல்லுாரியில் கணித துறை கருத்தரங்கு
ADDED : செப் 24, 2024 06:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் கணித துறை கருந்தரங்கம் நடந்தது.
கல்லூரி முதல்வர் மாலதி தலைமை தாங்கினார். கல்லூரி கல்வி அதிகாரி அசோக்குமார் முன்னிலை வகித்தார்.
கணிதத் துறை தலைவர் அப்பர்சாமி வரவேற்றார். மயிலாடுதுறை ஏ.வி.சி., கல்லூரியின் முன்னாள் கணித துறைத் தலைவர் சிவராமன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தனித்திறன், வரிசைப்படுத்துதல், மற்றும் பகுப்பாய்வு திறன் ஆகிய தலைப்பில் கருத்துரை வழங்கினார். கணித துறை மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
பேராசிரியை கவிதா நன்றி கூறினார்.

