/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாணிக்க விநாயகர் கோவில் கும்பாபிேஷகம்
/
மாணிக்க விநாயகர் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : ஏப் 06, 2025 07:31 AM

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவிலில் மாணிக்க விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
காட்டுமன்னார்கோவில் காந்தியார் தெரு மாணிக்க விநாயகர், கன்னிகா பரமேஸ்வரி கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி கடந்த 2ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி பூஜை நடந்தது. 3ம் தேதிகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், ரக்க்ஷா பந்தனம், முதல் கால யாகசாலை பூஜை, தீபாரதனை நடந்தது.
நேற்று முன்தினம் யாகசாலை பூஜையில் இருந்து சந்திரசேகரசிவம் சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் புனித கலசங்களை தலையில் சுமந்தபடி கோவில் கோபுரத்திற்கு சென்றனர். பின், கலசத்தில், புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயச்சந்திரன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

