ADDED : பிப் 09, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரும் 22ம் தேதி, மஹாபிேஷகம் நடக்கிறது.
உலக நன்மை வேண்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், கோடி அர்ச்சனை, அதிருத்ர மஹா யாகம், மஹாபிஷேகம் ஆகியன நடக்கிறது.
அதை முன்னிட்டு நேற்று அதிருத்ர பாராயணம் துவங்கியது. 18ம் தேதி வரையில், தினமும் காலை 8:00 மணியளவில், 121 தீட்சதர்களால் அதிருத்ர ஜபம் செய்யப்படுகிறது. 22ம் தேதி அதிருத்ர மஹா யாகம், லட்ச ஹோமும், கோவில் கனகசபையில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மாசி மாத மஹாபிஷேகம் நடக்கிறது.
ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் சிவராம தீட்சிதர், துணை செயலாளர் சிவசங்கர தீட்சிதர் செய்துள்ளனர்.

