/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூலி தொழிலாளி மர்ம சாவு பெண்ணாடம் அருகே பரபரப்பு
/
கூலி தொழிலாளி மர்ம சாவு பெண்ணாடம் அருகே பரபரப்பு
ADDED : பிப் 07, 2024 07:44 AM
பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே தொழிலாளியின் வாய், காது அறுக்கப்பட்டு துாக்கில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த டி.வி.புத்துாரை சேர்ந்தவர் மாயவன்,55; கரும்பு வெட்டும் தொழிலாளியான இவருக்கு கண்ணகி,50; வள்ளி, 45, என்ற இரு மனைவிகள் உள்ளனர்
இவர்களில் முதல் மனைவி கண்ணகி கணவரை பிரிந்து காட்டுமன்னார்கோவில் அடுத்த பாப்பாக்குடியில் உள்ள தாய் வீட்டில் வசிக்த்து வருகிறார்.
வள்ளியுடன் மாயவன் வசித்து வந்தார். இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு அவர்களுக்குள் மீண்டும் பிரச்னை ஏற்பட்டதில், வள்ளி தனது மகன், மகளுடன் அருகில் உள்ள கோவிலுக்கு துாங்கச் சென்றனர்.
நேற்று காலை 6:00 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது, மாயவன் துாக்கில் இறந்து கிடந்தார். அவது காது மற்றும் நாக்கு அறுக்கப்பட்டிருந்தது. நெஞ்சு பகுதியில் காயங்கள் இருந்தது.
இதுகுறித்து கண்ணகி அளித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சந்தேக மரணம் பிரிவில் வழக்குப் பதிந்து, கொலையா, தற்கொலையா என விசாரித்து வருகின்றனர்.
கரும்பு வெட்டும் தொழிலாளி வாய், காது மர்மமான முறையில் அறுக்கப்பட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

