/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முத்தாலம்மன் கோவிலில் 10ம் தேதி கும்பாபிஷேகம்
/
முத்தாலம்மன் கோவிலில் 10ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 06, 2025 06:46 AM
புதுச்சத்திரம் : ஆண்டார்முள்ளிபள்ளம் முத்தாலம்மன் கோவிலில் வரும் 10ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார்முள்ளிப்பள்ளம் முத்தாலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் முன்னிட்டு நாளை 7ம் தேதி காலை 7:00 மணிக்கு எஜமானர் சங்கல்பம் புண்ணிய வாகனம், மகா கணபதி ஹோமம், மாலை 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, இரவு 9:00 மணிக்கு பூர்ணாஹூதி தீபாராதனை நடக்கிறது.
8ம் தேதி காலை 7:00 மணிக்கு அங்குரார்பணம், ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், மாலை 6:00 மணிக்கு யாக சாலை பிரவேசம் முதல் கால யாக பூஜை, இரவு 9:00 மணிக்கு பூர்ணாஹூதி தீபாராதனை நடக்கிறது.
9ம் தேதி காலை 9:00 மணிக்கு விசேஷ சாந்தி, இரண்டாம் கால யாக பூஜை, மாலை 6:00 மணிக்கு விசேஷ சாந்தி, மூன்றாம் கால யாக பூஜை, தீபாராதனை நடக்கிறது. 10ம் தேதி காலை 6:00 மணிக்கு கோபூஜை, நான்காம் கால யாக பூஜை, பிம்ப சுத்தி, நாடி சந்தானம், 7:45 மணிக்கு கடம் புறப்பாடு செய்து, 8:15 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

