/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விபத்தில் சிக்கிய நபரை மீட்ட கடலுார் கலெக்டருக்கு பாராட்டு
/
விபத்தில் சிக்கிய நபரை மீட்ட கடலுார் கலெக்டருக்கு பாராட்டு
விபத்தில் சிக்கிய நபரை மீட்ட கடலுார் கலெக்டருக்கு பாராட்டு
விபத்தில் சிக்கிய நபரை மீட்ட கடலுார் கலெக்டருக்கு பாராட்டு
ADDED : பிப் 19, 2024 04:41 AM
கடலுார்; கடலுாரில் விபத்தில் சிக்கிய நபரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கலெக்டருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
புதுச்சேரி, பாகூரைச் சேர்ந்தவர் முருகன் 51; ஏ.சி., மெக்கானிக். இவர் நேற்று காலை 10:00 மணியளவில், கடலுாரில் நெல்லிக்குப்பம் சாலையை பைக்கில் கடக்க முயன்ற போது கடலுாரில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற சுபஸ்ரீ என்ற தனியார் பஸ் மோதியது.
இதில் முருகன் படுகாயமடைந்தார். இதனால் செம்மண்டலம் சாலையில் போக்குவரத்து பாதித்தது.
அப்போது அவ்வழியாக காரில் வந்த கடலுார் கலெக்டர் அருண்தம்புராஜ், விபத்தை பார்த்து, காரில் இருந்து உடனே இறங்கி வந்து விபத்தில் சிக்கிய முருகனை மீட்டு முதல் உதவி செய்தார். கடலுார் புதுநகர் போலீசார் மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தார்.
பின், முருகனை 108 ஆம்புலன்சில் கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து, போலீசாருடன் இணைந்து போக்குவரத்தை சரி செய்தார்.
கலெக்டரின் செயலுக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

