/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜெ., பிறந்தநாள் விழா: எம்.எல்.ஏ., பங்கேற்பு
/
ஜெ., பிறந்தநாள் விழா: எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : பிப் 26, 2024 05:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் பேரூராட்சிக்குட்பட்ட 5 வது வார்டு சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
காட்டுமன்னார்கோவிலில் கீழ வீதியில் நடந்த விழாவில் மாவட்ட செயலாளர் , பாண்டியன் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, நலத்திட்ட உதவிகள் வழங்கி, அன்னதானத்தை துவக்கி வைத்தார். மாநில ஜெ., பேரவை துணைச் செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் எம்ஜிஆர் தாசன் வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோதை வசந்தகுமார் செய்திருந்தார். நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

