/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கலப்பு திருமணம் செய்த இளம்பெண் வேலை கேட்டு கலெக்டரிடம் வாக்குவாதம்
/
கலப்பு திருமணம் செய்த இளம்பெண் வேலை கேட்டு கலெக்டரிடம் வாக்குவாதம்
கலப்பு திருமணம் செய்த இளம்பெண் வேலை கேட்டு கலெக்டரிடம் வாக்குவாதம்
கலப்பு திருமணம் செய்த இளம்பெண் வேலை கேட்டு கலெக்டரிடம் வாக்குவாதம்
ADDED : மார் 15, 2024 11:20 PM
கடலுார்: கலப்பு திருமணம் செய்த இளம்பெண், அரசு வேலை வழங்கக்கோரி கலெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வேலு மனைவி சமர்த்தியவதி. இவர் நேற்று கடலுார் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
அங்கு மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் மனு வாங்கிய கலெக்டர் அருண்தம்புராஜிடம் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைக்கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த பேலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அவர் கூறுகையில், 'தான் பொறியியல் பட்டம் படித்துள்ளேன். தற்போது பூ வியாபாரம் செய்து வருகின்றேன்.
நான் கடந்த 2010ம் ஆண்டு எனது கணவரை கலப்பு திருமணம் செய்து கொண்டேன்.
இதையடுத்து, அரசு துறையில் பல அலுவலகங்களில் தற்காலிக கணினி இயக்குபவர் ஊழியராக பணிபுரிந்துள்ளேன்.
பணிச்சுமை மற்றும் சம்பளம் சரியாக வழங்கப்படாததால் பணியில் இருந்து விலகிவிட்டேன்.
எனவே, கலப்பு திருமணம் செய்த எனக்கு அரசு வேலை வழங்கக்கோரி பலமுறை கலெக்டர் அலுவலகம், சப் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அரசு வேலை வழங்க வேண்டும்' என்றார்.
இதையடுத்து, சமர்த்தியவதியிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

