/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நாச்சியார்பேட்டையில் குளங்கள் சீரமைப்பு தீவிரம்
/
நாச்சியார்பேட்டையில் குளங்கள் சீரமைப்பு தீவிரம்
ADDED : செப் 25, 2024 11:43 PM

விருத்தாசலம் : விருத்தாசலம் நாச்சியார்பேட்டையில் 1.12 கோடி ரூபாயில் இரண்டு குளங்கள் சீரமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
விருத்தாசலம் நகராட்சி நாச்சியார்பேட்டையில் இருந்து எருமனுார் செல்லும் சாலையோரம் முத்து மாரியம்மன் கோவில் குளம், தாமரை குளம் ஆகியன உள்ளன.
இதில் நீர்வரத்து இல்லாமல் துார்ந்து, கருவேல மரங்கள் மண்டிக் கிடக்கிறது. இதனை சீரமைத்து நீர்வரத்து ஏற்படுத்தினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அதன்படி, 1.12 கோடி ரூபாயில் படிக்கட்டுகள், மின் விளக்குகள், நடைபாதை, இருக்கைகள் ஆகிய வசதிகளுன் நவீன முறையில் சீரமைக்கும் பணி துவங்கியது.
தற்போது, நான்கு பொக்லைன் இயந்திரங்களுடன் குளங்களை சுற்றி மண்டியிருந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, கரைகள் பலப்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது.
தொடர்ந்து வரத்து வாய்க்காலை சீரமைத்து, மாரி ஓடையில் வரும் மழைநீர் வழிந்தோட வழி செய்யப்பட உள்ளது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயருவதுடன், கால்நடைகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வசதி கிடைக்க வாய்ப்புள்ளது. இப்பணியை சேர்மன் சங்கவி முருகதாஸ், வார்டு கவுன்சிலர் முத்துக்குமரன் பார்வையிட்டனர்.

