/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அலட்சியம் தான் தோல்விக்கு காரணம்: விருத்தாசலத்தில் சண்முகம் பேச்சு
/
அலட்சியம் தான் தோல்விக்கு காரணம்: விருத்தாசலத்தில் சண்முகம் பேச்சு
அலட்சியம் தான் தோல்விக்கு காரணம்: விருத்தாசலத்தில் சண்முகம் பேச்சு
அலட்சியம் தான் தோல்விக்கு காரணம்: விருத்தாசலத்தில் சண்முகம் பேச்சு
ADDED : அக் 14, 2024 08:42 PM

விருத்தாசலம்: பூத்துக்கு 50 முதல் 100 ஓட்டுகள் பெற்றால், வெற்றி பெறுவது உறுதி என விருத்தாசலத்தில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.
விருத்தாசலம் நகர அ.தி.மு.க., செயல்வீரர், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். நகர செயலாளர் சந்திரகுமார் வரவேற்றார்.
முன்னாள் அமைச்சர் சண்முகம் ஆலோசனை வழங்கி பேசியதாவது: முன்னாள் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கடந்த தேர்தல்களில் ஓட்டு குறைய என்ன காரணம் என நீங்களே பேசி தீர்வு காணுங்கள்.
ஒவ்வொரு தேர்தலிலும் அ.தி.மு.க.,வை வெற்றி பெற வைக்கும் தொண்டர்களை வைத்து தான், நுாறாண்டு காலம் இந்த இயக்கம் இருக்கும் என ஜெ., சொன்னார். கோபம், வருத்தம் இருக்கலாம்; ஆனால் ஒரு தொண்டன் கூட கட்சியை விட்டு போக மாட்டான்.
வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 2026ல் அ.தி.மு.க., ஆட்சி அமையும். எனவே, இளைஞர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கடந்த தேர்தலில் நமக்கும் தி.மு.க.,வுக்கும் 3 சதவீதம் தான் ஓட்டுகள் வித்தியாசம். அலட்சியம் தான் தோல்விக்கு காரணம். விலைவாசி உயர்வு, கட்டண உயர்வு என நாட்டில் என்ன நடப்பது என தெரியாத முதல்வர் ஸ்டாலின்.

