/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொசுத்தொல்லை அதிகரிப்பு: பொதுமக்கள் கடும் அவதி
/
கொசுத்தொல்லை அதிகரிப்பு: பொதுமக்கள் கடும் அவதி
ADDED : டிச 22, 2025 04:44 AM
கடலுார்: கொசுத்தொல்லை அதிகரித்து வருவதால் மாலை நேரத்தில் மக்கள் வெளியே நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடலுார் மாநகராட்சியில் தற்போது அதிகளவில் கொசு உற்பத்தியாகி வருகிறது. மாலை 6:00 மணியாகி விட்டால் கொசு தொல்லையால், மக்கள் பொதுவெளியில் நடமாட முடியவில்லை.
வாகனங்களில் செல்லும்போது வாய்க்குள் கொசு நுழைந்து உபாதையை ஏற்படுத்துகிறது. இரவு நேரங்களில் வீடுகளில் கொசுத்தொல்லையால் நிம்மதியாக துாங்க முடியவில்லை. கொசு விரட்டிகள் இல்லாமல் காலம் தள்ளவே முடியாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலங்களில், கொசுத்தொல்லையா ல் ஊழியர்கள் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.
மேலும், பஸ் நிலையம், பூங்கா, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

