/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் தொகுதி காங்., கட்சிக்கு தாரைவார்க்கப்பட்டதா? புலம்பும் தி.மு.க., நிர்வாகிகள்

ADDED : மார் 19, 2024 06:01 AM
கடலுார்: கடலுார் லோக்சபா தொகுதியில் கடலுார், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, திட்டக்குடி ஆகிய நான்கு சட்ட மன்றத் தொகுதிகளில் தி.மு.க.,வும், விருத்தாசலத்தில் கூட்டணி கட்சி காங்., மற்றும் பண்ருட்டியில் மட்டும் அ.தி.மு.க., என எம்.எல்.ஏ.,கள் உள்ளனர்.
கடந்த தேர்தலில் கடலுார் தொகுதியில் தி.மு.க, சார்பில் வெற்றி பெற்ற எம்.பி., ரமேஷ், கொலை வழக்கில் சிக்கியதில் இருந்து, ஒதுங்கி இருந்தார். கட்சியினர் மட்டுமின்றி தொகுதி மக்கள் பிரச்னையிலும் ஆர்வம் காட்டவில்லை. இதனால், அவர் மீது மக்கள் அதிர்ப்தியில் இருந்து வந்தனர். இருந்தும், மாவட்டத்தில் 5 சட்டசபை தொகுதியில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் வலுவாக இருப்பதால், இந்த முறையும் தி.மு.க., வேட்பாளர் நிறுத்தப்படுவார் என கட்சியினரிடையே எதிர்பார்ப்பு இருந்தது.
கடலுார் தொகுதியில் போட்டியிட சீனியர் அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அய்யப்பன் எம்.எல்.ஏ., தனது வாரிசுகளை களமிறக்க முனைப்பு காட்டினர்.
ஆனால், சீனியர் அமைச்சர், தனது மகனை களமிறக்கினால் சாதகமான சூழல் இல்லை என, சிலர் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
இதனால், கடலுார் தொகுதியில் மகனை களமிறக்க விரும்பவில்லை என, தெரிகிறது.
இதன் காரணமாக, எம்.பி., ரமேஷ் அதிருப்தியை காட்டி, கடலுார் தொகுதி காங்., கட்சிக்கு தாரைவார்க்கப்பட்டதாக தி.மு.க., நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.