/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் இன்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
/
கடலுாரில் இன்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
ADDED : பிப் 27, 2024 10:31 PM
கடலுார் - மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் கடலுாரில் இன்று நடக்கிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்ட நிர்வாகம் சார்பில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் இன்று 28ம் தேதி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடக்கிறது.
இதில் வேளாண் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
கூட்டத்தில் விவசாயிகள் வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனைகள் கோரிக்கையாக மனுக்களாக வழங்கலாம். கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல், கிசான் கார்டு அட்டையுடன் கூட்டம் நடக்கும் இடத்திற்கு காலை 8:00 மணிக்கு வந்து பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.

