/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாடலீஸ்வரர் கோவிலில் கோபுர தரிசனம்
/
பாடலீஸ்வரர் கோவிலில் கோபுர தரிசனம்
ADDED : மார் 10, 2024 06:19 AM

கடலுார் : கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடந்தது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியொட்டி நேற்று முன்தினம் காலை உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை பனிக்கட்டி மீது யோகாசனம், நாட்டிய பள்ளி மாணவிகளின் தேவாரம் இன்னிசை, வயலின் இசை, பரதத்தில் யோகா போன்றவை நடந்தது.
பாடலீஸ்வரர், பெரிய நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இரவு 8:00 மணி, 11:00, 2:00, 5:00 மணி என நான்கு காலங்கள் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக நீண்ட வரிசையில் காத்திருந்து விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை அதிகாரநந்தி வாகனத்தில் சாமி எழுந்தருளச் செய்து, கோபுர தரிசனம் நடந்தது.

