/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அருணாச்சல பள்ளியில் கீதா பாராயணம்
/
அருணாச்சல பள்ளியில் கீதா பாராயணம்
ADDED : அக் 26, 2025 10:57 PM
புவனகிரி: அறம் வளர்த்த நாயகி சேவை மையத்தின் சார்பில் கீதா பாராயணம் நிகழ்ச்சி, புவனகிரி அருணாச்சல பள்ளி யில் நடைபெற்றது.
சென்னை விருகம்பாக்கம் அறம் வளர்த்த நாயகி சேவை மையதி்னர் ஆன்மீக சேவையை செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அந்த வகையில் வரும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி கீதா ஜெயந்தியின் 5162 வது ஆண்டு விழா ஆயிரம் மரங்களுடன் இணைந்து கீதா பாராயண நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இதன் தொடர்ச் சியாக புவனகிரி அருணாச்சலா மழலையர் பள்ளியில் நேற்று ஒரு நாள் சிறப்பு முகாம் நடந்தது.
மாவட்ட பொறுப்பாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். மண்டல அமைப்பாளர் முருகன். தொழிலதிபர் ரத்தினசுப்பிரமணியர் முன்னிலை வகித்தனர். மாநில இணை அமைப்பாளர் ராம்குமார் பங்கேற்ற அடியார்களிடம் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி கீதா பாராயண சிறப்பு வகுப்பை நடத்தினார். முகாமில் புவனகிரி சுற்றுப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

