ADDED : செப் 14, 2025 02:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலை பள்ளியில் ஆசிரியர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
நெல்லிக்குப்பம் அரிமா சங்கம் மற்றும் ரோஸ்கண்ணன் நினைவு அறக்கட்டளை ஆகியன இணைந்து விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
ஜெயசந்திரன் தலைமை தாங்கினார். ராமலிங்கம் முன்னிலை வகித்தார். வட்டார தலைவர் ரவிசங்கர் வரவேற்றார். அரிமா முன்னாள் மாவட்ட ஆளுநர் சரவணன், ஆசிரியர் தினத்தையொட்டி ஆசிரியர்களை பாராட்டி பரிசு வழங்கினார்.
விழாவில், வாசுதேவன், ராஜப்பிரகாஷ், ஜெயஸ்ரீ, ரமேஷ்பாபு, கார்த்தி, சேகர், தலைமை ஆசிரியர் தேவநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.