/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓய்வு பெற்ற டாக்டர் பெயரில் ரூ.14.55 லட்சம் மோசடி; சென்னை சித்தா மருத்துவர் கைது
/
ஓய்வு பெற்ற டாக்டர் பெயரில் ரூ.14.55 லட்சம் மோசடி; சென்னை சித்தா மருத்துவர் கைது
ஓய்வு பெற்ற டாக்டர் பெயரில் ரூ.14.55 லட்சம் மோசடி; சென்னை சித்தா மருத்துவர் கைது
ஓய்வு பெற்ற டாக்டர் பெயரில் ரூ.14.55 லட்சம் மோசடி; சென்னை சித்தா மருத்துவர் கைது
ADDED : மார் 05, 2024 11:55 PM

கடலுார்: கடலுாரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு டாக்டர் பெயரில் ரூ. 14,55 லட்சம் மோசடி செய்த சென்னை சித்தா டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு டாக்டர் திருநாவுக்கரசு, 73; இவர் கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் கடந்த 2022ம் ஆண்டு செப்., 10ம் தேதி புகார் மனு அளித்தார்.
மனுவில், 'சென்னை புழலைச் சேர்ந்த சித்தா டாக்டர் கார்த்திக் பிந்து, 43; என்பவர் சென்னையில் தனக்கு சொந்தமான மருத்துவமனையில் மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளதாகவும், தகுதியானவர்கள் விண்ணப்பிக்க பயோ டேட்டா அனுப்புமாறும் விளம்பரம் செய்திருந்தார்.
அதன்பேரில், அவரை தொடர்பு கொண்டு பேசினேன். பின், அவர் கூறியதன் பேரில், தனது ஆதார் கார்டு, பான் கார்டு, மருத்துவ படிப்பு சான்றிதழ்கள், போட்டோ அனுப்பினேன்.
இச்சான்றுகளை பயன்படுத்தி எனது பெயரில் கார்த்திக் பிந்து சென்னை வங்கியில் போலி வங்கி கணக்கு துவங்கி அதன் மூலமாக தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி, 14 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார்.
ஆனால், அவர், தவணை செலுத்தவில்லை. நிதி நிறுவனத்தினர் என்னிடம் தவணைத் தொகை கேட்டபோது தனது பெயரில் பணம் மோசடி செய்தது தெரிந்தது. இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மனுவில் கூறப்பட்டிருந்தது.
அதன்பேரில், கடலுார் மாவட்ட குற்றப்பிரிவு வழக்குப் பதிந்து கார்த்திக் பிந்துவை தேடி வந்தனர். சென்னையில் பதுங்கியிருந்த அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக அப்போதைய வங்கி மேலாளர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கார்த்திக் பிந்து மீது இதுபோன்ற மோசடி வழக்கு சென்னை மாதவரம் போலீசில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

