/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெள்ளாற்றில் மணல் கடத்திய நான்கு மாட்டுவண்டிகள் பறிமுதல்
/
வெள்ளாற்றில் மணல் கடத்திய நான்கு மாட்டுவண்டிகள் பறிமுதல்
வெள்ளாற்றில் மணல் கடத்திய நான்கு மாட்டுவண்டிகள் பறிமுதல்
வெள்ளாற்றில் மணல் கடத்திய நான்கு மாட்டுவண்டிகள் பறிமுதல்
ADDED : பிப் 26, 2024 05:59 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே இருவேறு இடங்களில் வெள்ளாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்திய நான்கு மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெண்ணாடம் பகுதி வெள்ளாற்றில் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளில் மணல் கொள்ளை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், பெண்ணாடம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 3:30 மணியளவில் பெ.பொன்னேரி, இறையூர் பகுதிகளில் ரோந்து சென்றனர்.
அப்போது, அதிகாலை 4:00 மணியளவில் இறையூர் வெள்ளாற்றில் இருந்து இருவேறு இடங்களில் அனுமதியின்றி மணல் கடத்திச் சென்ற மேலநெமிலி கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி, 44, வேல்முருகன், 44, இறையூர் சுடுகாடு பகுதியில் இருந்து மணல் கடத்திய மதுரவள்ளி அண்ணாதுரை, 47, இறையூர் பாண்டுரங்கன் ஆகியோரது மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். பொன்னுசாமி உட்பட மூவரை கைது செய்து, தப்பியோடிய பாண்டுரங்கனை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

